*வாசிப்பை நேசிப்போம்* *வேல இராமமூர்த்தியின் பட்டத்து யானை* ஊரடங்கு நாளில் உலக புத்தக தினத்திற்கு பிறகு படித்த முதல் நாவல்.ஏற்கெனவே இவர் எழுதிய குற்றப் பரம்பரையை இரண்டு முறை வாசித்ததால் இப்புத்தகமும் இரண்டாம் முறை வாசிக்கப்பட்டது.. இராமநாதபுரம் மாவட்டத்தில் பெருநாழி கிராமத்தில் செல்லையா- இருளாயி தம்பதியர் மகனாகப் பிறந்த இரணசிங்கம் நாவலின் கதாநாயகன்.. கதையாசிரியர் கதையை இருகூறாகப்பிரித்து கதையை சொல்லிக் செல்கிறார். தற்போதைய இரணசிங்கம் அவனுடைய விடுதலை வேள்வி போர்த்திறம் சாதாரண படிப்பறிவில்லாத கிராமத்தின் வாலிபர்களை கும்பினி படையை எதிர்த்து போரிட பயிற்றுவிக்கும் முறை.. எதிரிகள் தாக்கி வீரர்கள் இறந்தால் மனம் தளராது போராடும் திறம், கம்பெனியாரின் காவல்நிலையத்தில் ( கச்சேரி) புகுந்து இராணுவ தளவாடங்கள், துப்பாக்கிகளை கைப்பற்றி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து சுதந்திர போராட்ட வீரர்களாக மாற்றுவது போராடுவது என ஒரு நிகழ்கால நிகழ்வாகும், எப்படி இது போன்ற சுதந்திர வேட்கை கொண்டவனாக மாறி *இந்துஸ்தான் குடியரசு இராணுவ வீரனாக" மாறினான் என்பதை ஒரு பகுதியாகவும் ஒரே நேரத்தில் எழுதிப் போகிறார்.. *ஆங்கிலே...